Tuesday, April 5, 2016

நம்மாழ்வார்


PC : Google
நமக்கு பிடித்த ஆளுமைகளுக்கெல்லாம் தாடி இருக்கிறதா இல்லை , தாடி வைக்கிற ஆளுமைகள் தாம் நமக்கு பிடிக்கிறதா தெரியவில்லை. வெள்ளை தாடி, இரு கண்களிலும் ரௌத்திரம்,கருணை ஒரு சேர பெற்றவர், இவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவிட்டாலும் அவருடைய ஆற்றலை மற்றை அவருக்கு நெருங்கிய  நண்பர்களிடம் கடத்தியிருக்கிறார், அவர்களை சந்தித்ததே அவரை சந்தித்த பாக்கியத்தை கொடுத்தது.

இவர் தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து, விதையான ஒரு இயற்கை விஞ்ஞானி. விஞ்ஞானி தெரியும் அதென்ன இயற்கை விஞ்ஞானி. அறிவியலில் ஒரு பகுதியை கற்று தேர்ந்து புதிய கண்டுபிடிப்புகள் செய்பவர் அறிவியல் விஞ்ஞானி( ). அது போலவே இயற்கை அதன் போக்கில் விட்டு இயற்கை பற்றி கற்று தேர்ந்தவர் இயற்கை விஞ்ஞானி. இவரு என்ன கண்டுபிடிச்சாரு என்று கேட்டால், பயிர்கள் செழித்து வளர மண்ணிற்கு செயற்கையாக சேர்க்கப்படும் உரங்கள் தேவை இல்லை, இயற்கையாகவே மண்ணிற்கு எதையும் மக்கவும், செழித்து வளர வைக்கவும் சக்தி உண்டு என்றார். மண்புழுக்களும் இன்னும் பிற நுண்ணுயிர்களும் இந்த வேலைகளை உழவுக்கு செய்யும் என்றார். அதனால் தான் மண்புழுக்கள் விவசாயியின் நண்பன் என்ற சொலவடையும் உண்டு. அவர் பற்றி இன்னும் தெரிந்து கொள்வோம் அடுத்தடுத்த இதழ்களில்.

- அருண் கார்த்திக்