Tuesday, April 5, 2016

நம்மாழ்வார்


PC : Google
நமக்கு பிடித்த ஆளுமைகளுக்கெல்லாம் தாடி இருக்கிறதா இல்லை , தாடி வைக்கிற ஆளுமைகள் தாம் நமக்கு பிடிக்கிறதா தெரியவில்லை. வெள்ளை தாடி, இரு கண்களிலும் ரௌத்திரம்,கருணை ஒரு சேர பெற்றவர், இவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவிட்டாலும் அவருடைய ஆற்றலை மற்றை அவருக்கு நெருங்கிய  நண்பர்களிடம் கடத்தியிருக்கிறார், அவர்களை சந்தித்ததே அவரை சந்தித்த பாக்கியத்தை கொடுத்தது.

இவர் தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து, விதையான ஒரு இயற்கை விஞ்ஞானி. விஞ்ஞானி தெரியும் அதென்ன இயற்கை விஞ்ஞானி. அறிவியலில் ஒரு பகுதியை கற்று தேர்ந்து புதிய கண்டுபிடிப்புகள் செய்பவர் அறிவியல் விஞ்ஞானி( ). அது போலவே இயற்கை அதன் போக்கில் விட்டு இயற்கை பற்றி கற்று தேர்ந்தவர் இயற்கை விஞ்ஞானி. இவரு என்ன கண்டுபிடிச்சாரு என்று கேட்டால், பயிர்கள் செழித்து வளர மண்ணிற்கு செயற்கையாக சேர்க்கப்படும் உரங்கள் தேவை இல்லை, இயற்கையாகவே மண்ணிற்கு எதையும் மக்கவும், செழித்து வளர வைக்கவும் சக்தி உண்டு என்றார். மண்புழுக்களும் இன்னும் பிற நுண்ணுயிர்களும் இந்த வேலைகளை உழவுக்கு செய்யும் என்றார். அதனால் தான் மண்புழுக்கள் விவசாயியின் நண்பன் என்ற சொலவடையும் உண்டு. அவர் பற்றி இன்னும் தெரிந்து கொள்வோம் அடுத்தடுத்த இதழ்களில்.

- அருண் கார்த்திக்

Sunday, February 14, 2016

பிரவாகம் - சிறுவர் இதழ் 1 - பிப் 2016

கூட்டு முயற்சி என்பது தனிமனிதராய் செய்யமுடியாத சில விஷயங்களை எளிதில் செய்து முடித்துவிடுகிறது.அப்படித்தான் எங்கள் தெருவிலுள்ள apartment தமிழ் மக்கள் சேர்ந்து சிறுவர்களுக்கு கதை சொல்ல துவங்கினோன்.அப்புறம் Craft நிகழ்வுகள் நடத்தினோம்.தற்பொழுது சிறுவர்களுக்கான இதழை கொண்டுவந்துள்ளோம்.பெங்களூர் என்பதால் சிறுவர்களுக்கு தமிழ் எழுத்துக்கள் பரிச்சயமில்லாததாக இருக்கிறது.ஆதலால் சிறுவர்களின் படைப்பை ஆங்கிலத்திலும் , பெரியவர்கள் படைப்பை தமிழிலும் தந்துள்ளோம்.சிறுவர்களுக்கு பெற்றோர்கள் தமிழ் படைப்புகளை வாசித்துக்காட்டுவர் என்ற நம்பிக்கையில் இப்படி ஒரு ஏற்பாடு செய்துள்ளோம்.
https://goo.gl/rz9L5s
https://goo.gl/rz9L5s



இணைய நண்பர்களும் இதழைப் பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்தினை பதியவும்.

நன்றி,
பிரவாகம்